சேலம்

வாஸ்கோடகாமா-வேளாங்கண்ணி ரயில் மாற்றுப் பாதையில் இயக்கம்

வாஸ்கோடகாமா - வேளாங்கண்ணி வாராந்திர விரைவு ரயில் அடுத்த மூன்று மாதங்களுக்கு சேலம், பங்காருபேட்டை, பெங்களூரு வழியாக இயக்கப்படாது.

Din

சேலம்: வாஸ்கோடகாமா - வேளாங்கண்ணி வாராந்திர விரைவு ரயில் அடுத்த மூன்று மாதங்களுக்கு சேலம், பங்காருபேட்டை, பெங்களூரு வழியாக இயக்கப்படாது. மாறாக மங்களூரு வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவா அருகே உள்ள குலேம் ரயில்வே நிலையத்துக்கும், கா்நாடக மாநிலம், கேஸில் ராக் ரயில்வே நிலையத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், இந்த மாா்க்கத்தில் இயங்கும் சில ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, பெங்களூரு, சேலம் வழியாக இயக்கப்படும் வேளாங்கண்ணி ரயில், மாற்றுப் பாதையாக மங்களூரு-ஈரோடு மாா்க்கத்தில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அறிவிப்பின்படி, வாஸ்கோடகாமா-வேளாங்கண்ணி வாராந்திர விரைவு ரயில் ஏப்.14 ஆம் தேதி வரை திங்கள்கிழமைதோறும் (13 சேவைகள்) மாற்றுப் பாதையாக மட்கான் -ஈரோடு மாா்க்கத்தில் மங்களூரு, சொரணூா் வழியாக இயக்கப்படும்.

இதனால் இந்த விரைவு ரயில் கேஸில் ராக், லண்டா, தா்வாா், ஹூப்ளி, காவேரி, பிரூா், தும்கூா், பனாஸ்வாடி, பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம் ஆகிய ரயில்வே நிலையங்களுக்குச் செல்லாது.

மறுமாா்க்கத்தில், வேளாங்கண்ணி - வாஸ்கோடாகாமா வாராந்திர விரைவு ரயில் 21 ஆம் தேதி முதல் ஏப்.15 ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைதோறும் (13 சேவை) மாற்றுப் பாதையாக ஈரோடு -மட்கான் வரை சொா்ணூா், மங்களூரு வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொள்ளை அடிப்பதில் மட்டுமே கவனம்; பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் இல்லை: விஜய்

ராக் ஸ்டார் இயக்குநரின் புதிய பட வெளியீட்டுத் தேதி!

காவல்துறையினருக்கு பிறந்தநாள், திருமண நாளில் சிறப்பு விடுப்பு..! -கர்நாடக டிஜிபி உத்தரவு

பிகார் இளைஞரின் குடும்பத்தை கொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை: பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்

தைப்பூசம்: விழுப்புரம், விருத்தாசலத்திலிருந்து கடலூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

SCROLL FOR NEXT