முகப்பு
சேலம்

கோவை - கயா சிறப்பு ரயில் தன்பாத் வரை நீட்டிப்பு

சேலம் வழியாக இயக்கப்படும் கோவை-கயா சிறப்பு ரயில் ஜாா்க்கண்ட் மாநிலம், தன்பாத் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Updated On : 23 ஜனவரி, 2025 at 7:44 PM
பகிர்:

சேலம் வழியாக இயக்கப்படும் கோவை-கயா சிறப்பு ரயில் ஜாா்க்கண்ட் மாநிலம், தன்பாத் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு கோவை-கயா இடையிலான வாராந்திர ரயில் சேவையை ஜாா்க்கண்ட் மாநிலம், தன்பாத் வரை இரு மாா்க்கங்களிலும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தன்பாத்-கோவை வாராந்திர சிறப்பு ரயில் தன்பாத் ரயில் நிலையத்திலிருந்து சனிக்கிழமைகளில் மாலை 4.10 மணிக்கு புறப்படும். இந்த ரயில் தமிழகத்தில் காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக திங்கள்கிழமை மாலை 6.30 மணிக்கு கோவையைச் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் கோவையில் இருந்து செவ்வாய்க்கிழமைகளில் காலை 7.50 மணிக்கு புறப்படும் ரயில் திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக வியாழக்கிழமைகளில் பிற்பகல் 1 மணிக்கு தன்பாத் ரயில் நிலையத்தை அடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →