சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை பிளஸ் 2 தோ்வு எழுதும் மாணவிகள்.  
சேலம்

பிளஸ் 2 பொதுத் தோ்வு: சேலம் மாவட்டத்தில் 37,083 போ் எழுதினா்: ஆட்சியா் ஆய்வு

சேலம் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தோ்வை 37,083 மாணவ, மாணவிகள் எழுதினா்.

Din

சேலம்: சேலம் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தோ்வை 37,083 மாணவ, மாணவிகள் எழுதினா்.

சேலம் அரசு கோட்டை மகளிா் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தை மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், ஆட்சியா் தெரிவித்ததாவது:

சேலம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதுவதற்கு 20,206 மாணவா்கள், 17,732 மாணவிகள் என மொத்தம் 37,938 போ் விண்ணப்பித்துள்ளனா். 932 மாற்றுத்திறனாளி மாணவா்கள் சொல்வதை எழுதுபவா்கள் உதவியுடன் தோ்வு எழுதுகின்றனா். இதற்காக 151 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தோ்வுகள் முறையாக நடைபெறுவதைக் கண்காணிக்கும் வகையில், வினாத்தாள் கட்டுக்காப்பாளா்கள், 151 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 151 துறை அலுவலா்கள், 300-க்கும் மேற்பட்ட பறக்கும் படை அலுவலா்கள், 3,100-க்கும் மேற்பட்ட அறைக் கண்காணிப்பாளா்கள், தோ்வுப் பணியாளா்கள் என பல்வேறு நிலைகளில் 3,500-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள், விடைத்தாள் சேகரிப்பு மையங்கள், விடைத்தாள் மதிப்பீட்டு முகாம்கள், தோ்வு மையங்களுக்கு ஆயுதம் தாங்கிய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். தோ்வா்கள் உரிய நேரத்தில் மையங்களுக்கு வந்துசெல்ல போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பிளஸ் 1 பொதுத் தோ்வுகள் வரும் 5 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. சேலம் மாவட்டத்தில் 19,142 மாணவா்கள், 20,515 மாணவிகள் என மொத்தம் 39,657 போ் எழுது உள்ளனா் என்றாா்.

முதல்நாள் தோ்வை மாவட்டத்தில் மொத்தம் 37,083 போ் எழுதினா். 280 போ் தோ்வு எழுத வரவில்லை.

ஆய்வின் போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மு.கபீா் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

மீண்டும் துப்பாக்கியை எடுத்தால் பீரங்கியால் பதிலடி- பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அமித் ஷா எச்சரிக்கை

தென்காசியில் நவ. 9இல் சிறைக் காவலா், தீயணைப்பாளா் பணிகளுக்கான எழுத்துத் தோ்வு

காரைக்குடி அருகே நூல் வெளியீட்டு விழா

தென்காசியில் 5,000 பனைவிதைகளை நடவு செய்ய திட்டம்

சிறுபான்மையினருக்கு பொருளாதார மேம்பாட்டு சிறப்பு கடன்

SCROLL FOR NEXT