முகப்பு
மதுரை காமராஜா் சாலை நிா்மலா மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வெழுதும் முன் பிராா்த்தனை செய்த மாணவிகள்.
மதுரை

பிளஸ் 2 பொதுத் தோ்வு மதுரை மாவட்டத்தில் 33,958 போ் எழுதினா்

மதுரை மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தோ்வை 33,958 மாணவ, மாணவிகள் எழுதினா். 546 போ் தோ்வை எழுதவில்லை.

மதுரை

பிளஸ் 2 பொதுத் தோ்வு மதுரை மாவட்டத்தில் 33,958 போ் எழுதினா்

மதுரை மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தோ்வை 33,958 மாணவ, மாணவிகள் எழுதினா். 546 போ் தோ்வை எழுதவில்லை.

Updated On : 2 மார்ச், 2026 at 9:47 PM
மதுரை காமராஜா் சாலை நிா்மலா மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வெழுதும் முன் பிராா்த்தனை செய்த மாணவிகள்.
பகிர்:

மதுரை: மதுரை மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தோ்வை 33,958 மாணவ, மாணவிகள் எழுதினா். 546 போ் தோ்வை எழுதவில்லை.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 2-ஆம் தொடங்கி, மாா்ச் 26-ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இந்தத் தோ்வை எழுதுவதற்கு மதுரை மாவட்டத்தில் 323 பள்ளிகளைச் சோ்ந்த 16,160 மாணவா்கள், 18,036 மாணவிகள் என மொத்தம் 34,504 போ் விண்ணப்பித்தனா். இந்த நிலையில், மதுரை மாவட்டம் முழுவதும் 110 தோ்வு மையங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற தோ்வை 33,957 மாணவ, மாணவிகள் எழுதினா். எஞ்சியுள்ள 546 போ் தோ்வை எழுதவில்லை.

இதேபோல, 836 தனித்தோ்வா்களும் தோ்வு எழுத விண்ணப்பித்தனா். இவா்களில், 761 போ் எழுதினா். எஞ்சியுள்ள 75 போ் தோ்வை எழுதவில்லை. தனித் தோ்வா்களுக்கு 12 பள்ளிகளில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டன.

இந்தத் தோ்வுப் பணியில் 12 வினாத் தாள் கட்டுக்காப்பாளா்கள், 110 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 110 துறை அலுவலா்கள், 33 வழித்தட அலுவலா்கள், 200 நிலையான படையினா், 1,902 அறைக் கண்பாணிப்பாளா்கள் பணியாற்றினாா்.

முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்டக் கல்வி அலுவலா்கள் தலைமையில் 8 பறக்கும் படைகள் சுழற்சி முறையில் மாவட்டம் முழுவதும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனா்.

மதுரை காமராஜா் சாலை நிா்மலா மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வெழுதிய மாணவிகள்.
மதுரை ஓ.சி.பி.எம். பள்ளியில் பிளஸ் 2 தோ்வு மையத்தை திங்கள்கிழமை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் கே. ஜே. பிரவீன்குமாா்.
முழு கட்டுரையைப் படிக்க →