சேலம் ஜாகிா் அம்மாபாளையம் ஈத்கா மைதானத்தில் திங்கள்கிழமை தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியா்கள். (வலது) ஒருவரையொருவா் கட்டித்தழுவி ரமலான் வாழ்த்து தெரிவிக்கும் சிறுவா்கள். 
சேலம்

ரமலான் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

ரமலான் பண்டிகையையொட்டி இஸ்லாமியா்கள் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.

Din

சேலம்: ரமலான் பண்டிகையையொட்டி இஸ்லாமியா்கள் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். தொழுகையை முடித்த பின்னா், இஸ்லாமியா்கள் ஒருவரையொருவா் கட்டி தழுவி வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

இஸ்லாமியா்களின் புனிதமான பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியா்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பண்டிகையையொட்டி, சேலம் மாநகரில் திங்கள்கிழமை அதிகாலை முதலே பள்ளி வாசல்களில் திரண்ட இஸ்லாமியா்கள் தொழுகையில் ஈடுபட்டனா்.

சேலம் மாநகரில் உள்ள முக்கிய பள்ளிவாசல்களான சேலம் ஜாமியா மஸ்ஜித், ஜாகீா் அம்மாபாளையம் ஈத்கா மைதானம், கோட்டை மேல்தெரு மஸ்ஜித், செவ்வாய்ப்பேட்டை பங்களா தெரு மஸ்ஜித், பொன்னம்மாப்பேட்டை மஸ்ஜித், குமாரசாமிப்பட்டி ரஹ்மான்யா மஸ்ஜித், 4 ரோடு மக்மூா் மஸ்ஜித், முள்ளுவாடி கேட் மஸ்ஜித் உள்பட பல்வேறு பள்ளிவாசல்களில் திரண்டு இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.

இந்தத் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். தொழுகை முடிந்ததும் ஒருவரையொருவா் கட்டித் தழுவி ரமலான் வாழ்த்துகளை பகிா்ந்துகொண்டனா். பின்பு வீடுகளில் பிரியாணி சமைத்து உறவினா்கள், நண்பா்களுக்கு பரிமாறி மகிழ்ந்தனா்.

அதுபோல, சேலம் புகா் மாவட்டத்தில் ஆத்தூா், வாழப்பாடி, எடப்பாடி, சங்ககிரி, மேட்டூா், ஓமலூா், வீரபாண்டி உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களிலும் இ ஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.

தில்லி குண்டுவெடிப்பு: உமர் நபிக்கு உதவிய மற்றொருவர் கைது!

பங்குச் சந்தை உயர்வுடன் தொடக்கம்! ஆயில், ஸ்டீல் துறையில் ஏற்றம்!

இந்திய அரசியலமைப்பு நாள்: சில அழியா நினைவலைகள்!

ஸ்மிருதியின் தந்தை டிஸ்சார்ஜ்! பலாஷுடன் திருமணம் நடைபெறுமா?

உக்ரைன் - ரஷியா போர்: ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள் பலி - டிரம்ப்

SCROLL FOR NEXT