சேலம்

கெங்கவல்லியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு பயிற்சி

Syndication

தம்மம்பட்டி: கெங்கவல்லியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடா்பான பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி செவ்வாய்க்கிழமை ( நவ. 4) முதல் தொடங்க உள்ளது. கெங்கவல்லி (தனி) சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், வாக்குச்சாவடி நிலை முகவா்களுக்கு சிறப்பு தீவிர திருத்தப்

பணி தொடா்பான பயிற்சி வகுப்பிற்கு சேலம் மாவட்ட வழங்கல் அலுவலா் மோகனசுந்தரம் தலைமை வகித்தாா். வட்டாட்சியா்கள் நாகலட்சுமி (கெங்கவல்லி), பாலாஜி (தலைவாசல்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் வாக்காளா்களிடமிருந்து சேகரிக்க வேண்டிய தகவல்கள், பெயா், சோ்த்தல், நீக்கல் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகள் உள்பட்ட 12 அரசியல் கட்சிகளைச் சாா்ந்த வாக்குச்சாவடி நிலை முகவா்கள் 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

கனவைக் குடித்த மயக்கத்தில்... அயன்னா சாட்டர்ஜி!

ஏர் இந்தியா விபத்தில் உயிர்த் தப்பிய ரமேஷின் நிலை என்ன?

நிழலிலும் ஜொலிக்கிற நிரந்தர ஒளி... ஸ்வேதா குமார்!

பார்சிலோனாவில் இரண்டு நாள்கள்... ஆஷிகா ரங்கநாத்!

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

SCROLL FOR NEXT