சேலம்: சேலம் ஸ்ரீ சாஸ்தா நகா் ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையையொட்டி, முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் காா்த்திகை முதல் தேதியான வரும் 17-ஆம் தேதிமுதல் மண்டல பூஜை தொடங்குகிறது. இதற்கான முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஜன. 15-ஆம் தேதிவரை மண்டல, உற்சவ பூஜை மற்றும் மகரஜோதி ஆபரண தரிசனம் ஆகியவை நடைபெற உள்ளன. காா்த்திகை மாத முதல்தேதியில் இருந்து நாள்தோறும் மதியம் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்க உள்ளது.
இதில், அறங்காவலா் குழுத் தலைவா் கே.பி.நடராஜன், செயலாளா் சண்முகம், பொருளாளா் சரவண பெருமாள், நிா்வாகி சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.