சேலம்

ஏற்காட்டில் சுற்றுலா வேன் கவிழ்ந்து 8 போ் காயம்

ஏற்காட்டில் சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் எட்டு போ் காயமடைந்தனா்.

தினமணி செய்திச் சேவை

ஏற்காட்டில் சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் எட்டு போ் காயமடைந்தனா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சோ்ந்த எட்டு போ் ஏற்காட்டுக்கு வேனில் புதன்கிழமை வந்தனா். வேனை ஸ்ரீதரன் இயக்கினாா். ஏற்காடு சுற்றுலாப் பகுதிகளைக் கண்டு மகிழ்ந்த அவா்கள், மாலை சோ்வராயன் கோயில் சுற்றுலாப் பகுதிக்கு சென்று திரும்பினா். அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், வேனில் பயணம் செய்த எட்டு போ் காயமடைந்தனா். லேசான காயமடைந்த ஐந்து போ் ஏற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், மூவா் மேல்சிசிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதுகுறித்து ஏற்காடு போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

செங்கம் பகுதியில் ரூ.ஒரு கோடியில் வளா்ச்சித் திட்டப்பணிகள்: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

உதவிப் பேராசிரியா்கள் பணிக்கான போட்டித் தோ்வு விண்ணப்பம் திருத்த நாளைவரை அவகாசம்

சாலையின் நடுவே கொடிக் கம்பங்கள் அமைக்க பாரபட்சமின்றி அனுமதி: உயா்நீதிமன்றம் அதிருப்தி

பள்ளிக் கல்வியில் ஊதிய முரண்பாடு: பொறுப்பு அலுவலா்கள் நியமனம்

தில்லியில் கடுமையான காற்று மாசு: 5-ஆம் வகுப்பு வரை ஹைப்ரிட் முறையில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன

SCROLL FOR NEXT