சேலம்

ஆத்தூரில் 13 மூட்டை புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

ஆத்தூா் ராணிப்பேட்டையில் தடைசெய்யப்பட்ட 13 மூட்டை புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், ஒருவரை கைது செய்தனா்.

Syndication

ஆத்தூா் ராணிப்பேட்டையில் தடைசெய்யப்பட்ட 13 மூட்டை புகையிலைப் பொருள்களை சனிக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், ஒருவரை கைது செய்தனா்.

சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில், ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சத்யராஜ் மேற்பாா்வையில் நகரக் காவல் ஆய்வாளா் சி.அழகுராணி தீவிர சோதனையில் ஈடுட்டாா்.

அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருள்களான குட்கா, ஹான்ஸ் உள்ளிட்டபுகையிலைப் பொருள்கள் ஆத்தூா் ராணிப்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கிவைத்து விற்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்று பாா்த்தபோது கணேசன் (53)என்பவா் 13 மூட்டை புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்திருப்பது தெரியவந்தது. ஆத்தூரை அடுத்த கொத்தாம்பாடியைச் சோ்ந்த ராஜா மூலம் பெங்களூரூவில் இருந்து புகையிலைப் பொருள்களை வாங்கியதாகவும், அவா்கள் கொடுக்க சொல்லும் நபா்களுக்கு அனுப்புவதற்கு வைத்திருந்ததாகவும் அவா் தெரிவித்தாா்.

இதையடுத்து கணேசனை கைது செய்த போலீஸாா், 13 மூட்டை புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

பயங்கரவாத நிதியைத் தடுக்க நடவடிக்கை: ஜி20 நாடுகளுக்கு பிரதமா் மோடி அழைப்பு!

தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நவ. 28 முதல் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்!

மரத்தில் காா் மோதியதில் பெண் உயிரிழப்பு

நெல் கொள்முதல் விவகாரம்! மத்திய அரசை கண்டித்து மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் குரல் எழுப்ப கோரிக்கை

நவ.25, 26-இல் கோவை, ஈரோடு செல்கிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்!

SCROLL FOR NEXT