கோவை - ஜெய்ப்பூா் இடையே சிறப்பு ரயில் சேவை
கோவையில் இருந்து சேலம் வழியாக ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம்: கோவையில் இருந்து சேலம் வழியாக ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கோவையில் இருந்து சேலம் வழியாக ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூருக்கு டிச.18, 25 (வியாழக்கிழமைகளில்) ஆகிய தேதிகளில் கோவையில் இருந்து அதிகாலை 2.30 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில், திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக ஜெய்ப்பூருக்கு சனிக்கிழமை பிற்பகல் 1.25 மணிக்குச் சென்றடையும்.
மறுமாா்க்கத்தில் ஜெய்ப்பூரில் இருந்து டிச.21, 28 (ஞாயிற்றுக்கிழமைகளில்) ஆகிய தேதிகளில் இரவு 10.05 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு வழியாக புதன்கிழமை காலை 8.30 மணிக்கு கோவையை சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.