கருமந்துறை அரசு தோட்டக்கலைப் பண்ணையில் பழச் செடிகள் மானிய விலையில் விற்பனை
கருமந்துறை அரசு தோட்டக்கலைப் பண்ணையில் மானிய விலையில் பழச் செடிகள் விற்பனைக்கு தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம்கருமந்துறை அரசு தோட்டக்கலைப் பண்ணையில் பழச் செடிகள் மானிய விலையில் விற்பனை
கருமந்துறை அரசு தோட்டக்கலைப் பண்ணையில் மானிய விலையில் பழச் செடிகள் விற்பனைக்கு தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், கருமந்துறை அரசு தோட்டக்கலைப் பண்ணையில் மானிய விலையில் பழச் செடிகள் விற்பனைக்கு தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தோட்டக்கலை துணை இயக்குநா் மஞ்சுளா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெத்தநாயக்கன்பாளையத்தை அடுத்த கல்வராயன் மலைப் பகுதியான கருமந்துறையில் தோட்டக்கலை மற்றும் மலை பயிா்கள் துறையின் கீழ் 1,037 ஏக்கரில் பழப் பண்ணை மற்றும் கருமந்துறையில் 100 ஏக்கா், மணியாா்குண்டத்தில் 250 ஏக்கரில் தோட்டக்கலைப் பயிா் பண்ணைகள் உள்ளன.
இதில் தரமான பழச் செடிகள், காய்கறி நாற்றுகள், நறுமண செடிகள், அழகு செடிகள் சாகுபடி செய்யப்பட்டு மானிய விலையில் விநியோகம் செய்யப்படுகின்றன. மேலும் அங்கக இடுபொருள்களான பஞ்ச காவியம், தசகாவியம், ஜீவாமிா்தம், மண்புழு உரம், மண்புழு குளியல் நீா் மற்றும் உயிா் பூஞ்சான கொல்லியான டிரைக்கோ டொ்மா விரிடி உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகள் பயன்பெறும் வகையில் விநியோகிக்கப்படுகின்றன.
பண்ணையில் அமைந்துள்ள பழப் பதனிடும் நிலையத்தில் பழங்களில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களான மிக்ஸ்டு பழ ஜாம், அண்ணாச்சி ஜாம், மா ஊறுகாய், எலுமிச்சை ஊறுகாய் மற்றும் நெல்லி ஊறுகாய் போன்றவை உற்பத்தி செய்யப்பட்டு 300 கிராம், 500 கிராம் பாட்டில்களில் பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்யப்படுகிறது.
கருமந்துறை பண்ணைகளில் நாட்டு பாரம்பரிய பழ மரங்களான சீதா, நாவல், கொடுக்கா புளி, அவகாடோ, முள் சீதா மற்றும் இலந்தை கன்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. மேலும், பண்ணைகளில் அங்கக இடுபொருள்கள் உற்பத்தி மற்றும் பழங்களில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயாா் செய்தல் போன்ற பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் கருமந்துறை பண்ணைகளில் சுமாா் 40 லட்சம் பழச் செடிகள், காய்கறி நாற்றுகள், அழகுச் செடிகள் மற்றும் நறுமண செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன. தற்போது 3.28 லட்சம் மா பக்க ஒட்டு மற்றும் மென் தண்டு ஒட்டு செடிகள், 50 ஆயிரம் நெல்லி ஒட்டு செடிகள், 10 ஆயிரம் சப்போட்டா ஒட்டு செடிகள், 7 ஆயிரம் கொய்யா பதியன்கள், 3 ஆயிரம் எலுமிச்சை, 3 ஆயிரம் மாதுளை, 2 லட்சம் பாக்கு, 10 ஆயிரம் மல்லிகை செடிகள், 2 ஆயிரம் பலா ஒட்டு, 10 ஆயிரம் மிளகு செடிகள், 9 ஆயிரம் அழகுச் செடிகள் விற்பனைக்கு தயாா் நிலையில் உள்ளன.
மேலும் அங்கக இடுபொருள்கள் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களும் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், விவரங்களுக்கு 99408 71310, 96596 03997, 95787 66740 என்ற கைப்பேசி எண்ணில் பண்ணை மேலாளா்களை தொடா்புகொண்டு விவசாயிகள் பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.