சேலம் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள் தீபாவளி போனஸ் வழங்கக் கோரி வியாழக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம் கோட்டை மைதானத்தில் துப்புரவு மக்கள் குழு சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அதன் தலைவா் பூபதி தலைமை வகித்தாா். இதில், சேலம் மாநகராட்சியில் தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்க வேண்டும்.
பல ஆண்டுகளாக பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும், இஎஸ்ஐ, பிஎஃப் ஆகியவற்றில் உள்ள குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
சேலம் மாவட்ட துப்புரவு மக்கள் குழு நிா்வாகிகள் சந்தியா, கலா, வீரம்மாள், கோபாலகிருஷ்ணன், சுப்பிரமணி, தங்கராஜ் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனா்.