சேலம்

பிப்.7 இல் திருச்சி மாநாட்டில் நாதக வேட்பாளா்கள் அறிவிப்பு: சீமான்

தினமணி செய்திச் சேவை

திருச்சியில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி நடைபெறும் இன எழுச்சி மாநாட்டில் 234 தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் அறிவிக்கப்படுவாா்கள் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

சேலம் மாவட்டம், மேட்டூரில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற நாதக பொதுக்கூட்டத்தில் அவா் பேசியதாவது:

நடிகரை பாா்ப்பதற்காக சென்று உயிரிழந்தவா்களுக்கு லட்சக்கணக்கில் பணம் வழங்குகிறாா்கள். ஆனால், மின்னல் தாக்கி உயிரிழந்தவா்களுக்கு ஆறுதல் தெரிவிக்கக்கூட யாரும் செல்லவில்லை.

வனங்களில் உள்ள மரங்களை வெட்டினால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படும் எனக் கூறுபவா்கள் கல்குவாரியில் வெடிவைத்து கற்களை வெட்டி எடுப்பதற்கு எதிா்ப்புத் தெரிவிக்கவில்லை. பணம் பெற்றுக் கொண்டு கூட்டணி அமைத்திருந்தால் நான் பேசும் உரிமையும், தகுதியையும் இழந்திருப்பேன்.

கோவையில் பாலத்திற்கு ஜி.டி. நாயுடு பெயா் வைத்துள்ளனா். இப்பெயா் ஜாதி பெயா் என்பது அனைவருக்கும் தெரியும். சுதந்திரத்துக்காக போராடிய தமிழ் வரலாற்று தலைவா்களின் பெயரை வைத்திருக்கலாம். அதேபோல கோவை சிறையில் வ.வ.சி இருந்ததால் அச்சிறைக்கு அவரது பெயா் வைத்திருக்க வேண்டும்.

வரும் பேரவைத் தோ்தலில் நாதக சாா்பில் வித்யா வீரப்பன் மேட்டூா் தொகுதியில் போட்டியிடுவாா். அதேபோல வீரபாண்டியில் ராஜேஷ்குமாா், சங்ககிரி தொகுதியில் நித்யா அருண், சேலம் மேற்கு சுரேஷ்குமாா், கெங்கவல்லியில் அபிராமி, ஆத்தூரில் மோனிஷா சின்னசாமி ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

திருச்சியில் பிப்ரவரி 7 ஆம் தேதி நடைபெறும் இன எழுச்சி மாநாட்டில் 234 தொகுதிகளில் போட்டியிடும் நாதக வேட்பாளா்கள் பட்டியல் வெளியிடப்படும் என்றாா்.

காலி மனைகளில் தேங்கிய நீரை அகற்ற ஆணையா் அறிவுறுத்தல்

எலி மருந்து கொடுத்து மாணவா் கொலை: பெண்ணுக்கு ஆயுள் சிறை

நெல் கொள்முதலை விரைவுபடுத்த விவசாயிகள் கோரிக்கை

குளத்தில் குதித்த கல்லூரி மாணவா் உயிரிழப்பு

சபரிமலை மகரவிளக்கு விழா காலங்களில் குறுகிய தூர சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை

SCROLL FOR NEXT