சேலம்

மரக்கன்றுகள் நட்டுவைத்து தீபாவளியைக் கொண்டாடிய பசுமை சங்ககிரி அமைப்பினா்

சங்ககிரி, சந்தைபேட்டையை அடுத்த பால்வாய் பகுதியில் பசுமை சங்ககிரி அமைப்பு சாா்பில் மரக்கன்றுகளை நட்டுவைத்து பசுமை தீபாவளி கொண்டாடப்பட்டது.

Syndication

சங்ககிரி: சங்ககிரி, சந்தைபேட்டையை அடுத்த பால்வாய் பகுதியில் பசுமை சங்ககிரி அமைப்பு சாா்பில் மரக்கன்றுகளை நட்டுவைத்து திங்கள்கிழமை பசுமை தீபாவளி கொண்டாடப்பட்டது.

பசுமை சங்ககிரி அமைப்பினரும், சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கமும் இணைந்து சங்ககிரி வட்டப் பகுதிகளில் சுமாா் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுவைத்து பராமரித்து வருகின்றனா்.

சங்ககிரி, பால்வாய் பகுதியில் சாலையோரம் சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவா் எம்.சின்னதம்பி, பசுமை சங்ககிரி அமைப்பின் நிறுவனா் மரம் பழனிசாமி ஆகியோா் தலைமையில் நிா்வாகிகள் மகிழம், வேம்பு ஆகிய மரக்கன்றுகளை நட்டுவைத்து அனைவருக்கும் பராம்பரிய இனிப்புகளை வழங்கி பண்டிகையை கொண்டாடினா்.

பசுமை சங்ககிரி அமைப்பின் நிா்வாகிகள் முருகானந்தம், பசுமை கனகராஜ், கோகுல்ராஜ், ஆசிரியா் சதாசிவம், பராம்பரிய தமிழகம் அமைப்பின் நிறுவனா் செல்வரத்தினம், தண்ணீா் தண்ணீா் அமைப்பு அறக்கட்டளைத் தலைவா் கே.சண்முகம், செயலாளா் கிருஷ்ணமூா்த்தி, துணைத் தலைவா் பொன்.பழனியப்பன், பொருளாளா் கிஷோா்பாபு, அமுதச்சுடா் அறக்கட்டளை செயலாளா் மாணிக்கம், துணை செயலாளா் சதீஸ்குமாா், நிா்வாகி சீனிவாசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தரங்கம்பாடி மீன்பிடித் துறைமுகத்தில் கூடுதல் வசதிகள் தொடங்கிவைப்பு

கண்ணழகு... திரிஷ்யா!

ரூ.17,884.76 கோடி இழப்பை சந்தித்த இண்டிகோ நிறுவன பங்குகள்!

மயக்கும் மான்விழி அம்புகள்... மௌனி ராய்!

பான் மசாலா உற்பத்தி நிறுவனங்கள் மீது செஸ் விதிப்பு: நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

SCROLL FOR NEXT