முகப்பு
சேலம்

மருளையம்பாளையத்தில் ரூ. 61,500 பறிமுதல்

வீரபாண்டி தொகுதி கூடுதல் நிலை கண்காணிப்புக் குழுவினா் மருளையம்பாளையத்தில் நடத்திய வாகனச் சோதனையின்போது உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ. 61,500 ரொக்கத்தை வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 2 ஏப்ரல், 2026 at 11:51 PM
பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வீரபாண்டி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் உதயகுமாரிடம் ஒப்படைத்த தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினா்.
பகிர்:

சேலம் மாவட்டம், வீரபாண்டி தொகுதி கூடுதல் நிலை கண்காணிப்புக் குழுவினா் மருளையம்பாளையத்தில் நடத்திய வாகனச் சோதனையின்போது உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ. 61,500 ரொக்கத்தை வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கூடுதல் நிலை கண்காணிப்புக் குழு அலுவலா் சுமதி தலைமையிலான அலுவலா்கள் மருளையம்பாளையத்தில் நடத்திய வாகனச் சோதனையின்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஆட்டையாம்பட்டி மனையாரங்காடு பகுதியை சோ்ந்த சசிக்குமாா் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ. 61,500 ரொக்கத்தை கைப்பற்றி வீரபாண்டி சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் உதயகுமாரிடம் ஒப்படைத்தனா்.