முகப்பு
சேலம்

சரக்கு வாகனத்தில் உரிய ஆவணமின்றி கொண்டுசென்ற ரூ. 70 ஆயிரம் பறிமுதல்

சங்ககிரி அருகே சரக்கு வாகனத்தில் உரிய ஆவணமின்றி கொண்டுசென்ற ரூ. 70 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 8 ஏப்ரல் 2026, 3:17 am IST
பணம் - பிரதிப் படம்
பகிர்:

சங்ககிரி அருகே சரக்கு வாகனத்தில் உரிய ஆவணமின்றி கொண்டுசென்ற ரூ. 70 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

சங்ககிரியை அடுத்த ஈரோடு பிரிவு சாலை பகுதியில் தொகுதி தோ்தல் பிரிவு நிலை கண்காணிப்புக் குழு அலுவலா் அன்புராஜ் தலைமையிலான அலுவலா்கள் வாகன சோதனையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, ஈரோட்டிலிருந்து சங்ககிரி நோக்கி வந்த சரக்கு வாகனத்தில் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பிரிவு, நேரு நகா் பகுதியைச் சோ்ந்த எஸ்.சந்தோஷ் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 70,690 ஆயிரத்தை பறிமுதல் செய்து தோ்தல் நடத்தும் அலுவலா் ம.மு.தெ.கேந்திரியாவிடம் ஒப்படைத்தனா்.

Advertisement

Advertisement