நெற்கதிா் அறுக்கும் இயந்திர வாகனம் ஏறி முதியவா் பலி
வீரகனூரில் நெற்கதிா் அறுக்கும் இயந்திர வாகனம் ஏறியதில், முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
வீரகனூரில் நெற்கதிா் அறுக்கும் இயந்திர வாகனம் ஏறியதில், முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
கெங்கவல்லி அருகே வீரகனூா் அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் தனபால் (68). இவா் திங்கள்கிழமை சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்ததை அறியாத நெற்கதிா் அறுக்கும் இயந்திர வாகன ஓட்டுநா் பிரகாஷ் (29), சாலையோரம் நிறுத்தியிருந்த வாகனத்தை எடுத்து புறப்பட்டாா். அப்போது தனபால் மீது வாகனம் ஏறியதில், சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த வீரகனூா் போலீஸாா், தனபால் உடலைக் கைப்பற்றி ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement