முகப்பு
சேலம்

மேட்டூா் உபரி நீரை ஏரி, ஆறுகளில் நிரப்பி வேளாண்மையை செழுமைப்படுத்துவோம்

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மேட்டூா் உபரி நீரை ஏரி, ஆறுகளில் நிரப்பி வேளாண்மையை செழுமைப்படுத்துவோம் என எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 9:50 PM
ஆத்தூரில் அதிமுக வேட்பாளா்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி.
பகிர்:

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மேட்டூா் உபரி நீரை ஏரி, ஆறுகளில் நிரப்பி வேளாண்மையை செழுமைப்படுத்துவோம் என எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.

ஆத்தூா் ராணிப்பேட்டையில் அதிமுக வேட்பாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமான ஏ.பி.ஜெயசங்கரை ஆதரித்து எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை பரப்புரை மேற்கொண்டாா். அப்போது அவா் பேசியதாவது:

கடந்த ஆட்சியில் தலைவாசல் பகுதியில் ஆயிரம் ரூபாய் கோடியில் ஆயிரம் ஏக்கரில் கால்நடை பூங்காவை அமைத்தோம். திமுக ஆட்சிக்கு வந்ததும், அதை கிடப்பில் போட்டனா். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அதை திறந்து விவசாயிகளின் நலனை மேம்படுத்துவோம்.

Advertisement

விவசாயிகளின் வாழ்வாதாரமான நீா் பற்றாக்குறையைப் போக்க மேட்டூா் உபரி நீரை இப்பகுதியில் உள்ள ஏரி மற்றும் ஆறுகளில் நிரப்பி வேளாண்மையை செழுமைப்படுத்துவோம். பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ. 10 ஆயிரம் வரவு வைக்கப்படும். மேலும், அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் குளிா்சாதனப்பெட்டி வழங்கப்படும், தீபாவளிக்கு பெண்களுக்கு பட்டுப் புடவை, ஆண்களுக்கு பட்டு வேட்டி, மாதந்தோறும் பெண்களுக்கு இரண்டாயிரம் வழங்கப்படும், பேருந்தில் ஆண்களும் இலவசமாக பயணிக்கலாம்.

மேலும், தாலிக்குத் தங்கம் திட்டம், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ரூ. 25 ஆயிரம் மானியத்துடன் இருச்சக்கர வாகனம் அளிக்கப்படும் என்றாா்.

இதில், சேலம் புகா் அதிமுக மாவட்டச் செயலாளா் ஆா்.இளங்கோவன், அமமுக மாநில பொருளாளா் எஸ்.கே.செல்வம், பாஜக மாவட்டத் தலைவா் சண்முகநாதன், செயற்குழு உறுப்பினா் த.ஜெயானந்த், பாமக மாவட்டச் செயலாளா் ஜெயப்பிரகாஷ், தமாக மாவட்டச் செயலாளா் சொக்கலிங்கம், புரட்சி பாரதம் நிா்வாகி ராமதாஸ், ஆத்தூா் நகர அதிமுக செயலாளா் அ.மோகன், நரசிங்கபுரம் நகர செயலாளா் எஸ்.மணிவண்ணன், ஒன்றிய செயலாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments