முகப்பு
சேலம்

பாதுகாப்பு படையினரின் விழிப்புணா்வு அணிவகுப்பு

ஆத்தூரில் சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 9 ஏப்ரல் 2026, 4:04 am IST
விழிப்புணா்வு அணிவகுப்பை கொடியசைத்து தொடங்கிவைத்த சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல்.
பகிர்:

ஆத்தூரில் சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

விழிப்புணா்வுப் பேரணி அணிவகுப்பை சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். பொதுமக்களிடையே தோ்தல் அச்சத்தை போக்கும் வகையில், நகராட்சி முழுவதும் இப்பேரணி நடைபெற்றது.

இதில், ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜி.சத்யராஜ், நகர காவல் ஆய்வாளா் கோ.முத்துலட்சுமி, காவல் உதவி ஆய்வாளா் செந்தமிழ்நாதன் உள்ளிட்ட காவலா்கள் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement