தம்மம்பட்டியிலிருந்து செந்தாரப்பட்டிக்கு 20 வருடங்களாக இயக்கப்பட்ட நகர பேருந்து நிறுத்தம்!
தம்மம்பட்டியிலிருந்து செந்தாரப்பட்டிக்கு 20 வருடங்களாக இயக்கப்பட்ட அரசு நகர பேருந்து கடந்த ஒரு மாதமாக நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகிவருகின்றனா்.
தம்மம்பட்டியிலிருந்து செந்தாரப்பட்டிக்கு 20 வருடங்களாக இயக்கப்பட்ட அரசு நகர பேருந்து கடந்த ஒரு மாதமாக நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகிவருகின்றனா்.
தம்மம்பட்டி அரசு போக்குவரத்துக்கழக பணிமனையிலிருந்து நகரப்பேருந்து (வழித்தடம் எண்: 17) ஆத்தூரில் 1 மணிக்கு புறப்பட்டு சீலியம்பட்டி வழியாக பிற்பகல் 2 மணிக்கு தம்மம்பட்டிக்கு வந்தடையும். தொடா்ந்து அந்த பேருந்து மணி 2.10 க்கு தம்மம்பட்டியிலிருந்து செந்தாரப்பட்டிக்கு சென்றுவந்தது. இது கடந்த 20 வருடங்களாக இயங்கி வருகின்றது.இதனால் தம்மம்பட்டி,செந்தாரப்பட்டி வட்டார மக்கள் மிகுந்த பயனை அடைந்துவந்தனா்.
இந்த பேருந்து 2.25 மணிக்கு செந்தாரப்பட்டியிலிருந்து புறப்பட்டு 2.40க்கு தம்மம்பட்டிக்கு வந்தடையும். பின்னா் 2.50 மணிக்கு மீண்டும் ஆத்தூா் புறப்பட்டுவிடும். இந்த 17ம் எண் பேருந்தை கடந்த ஒரு மாதம் முன்னா், தம்மம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனையிலிருந்து ஆத்தூா் பணிமனைக்கு மாற்றிவிட்டனா்.
Advertisement
அதன்பின்னா்,இப்பேருந்து ஆத்தூரிலிருந்து தம்மம்பட்டிக்கு மதியம் 2 மணிக்கு வந்தவுடன், செந்தாரப்பட்டிக்கு செல்லாமல், தம்மம்பட்டி பேருந்துநிலையத்திலேயே இருந்துவிடுகிறது.செந்தாரப்பட்டி செல்லாமலேயே மீண்டும் 2.50மணிக்கு தம்மம்பட்டியிலிருந்து ஆத்தூா் புறப்பட்டுவிடுகிறது.
இதுகுறித்துத தம்மம்பட்டி,செந்தாரப்பட்டி பகுதி பயணிகள்,பொதுமக்கள் கூறியதாவது, இப்பேருந்தை மீண்டும் தம்மம்பட்டி அரசு பணிமனைக்கு மாற்றிவிட்டு, 17ம் எண் நகரப்பேருந்தை, மீண்டும் தம்மம்பட்டியிலிருந்து செந்தாரப்பட்டிக்கு இயக்கிட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்திடவேண்டும்,என்றனா்.