முகப்பு
சேலம்

கல்வராயன் மலைக் கிராமங்களில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கல்வராயன் மலைக் கிராமமான ஆல்லரிப்பட்டியில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் ஏ.பி.ஜெயசங்கரன்.

Updated On : 11 ஏப்ரல், 2026 at 12:35 AM
கல்வராயன் மலைக் கிராமமான ஆல்லரிப்பட்டியில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் ஏ.பி.ஜெயசங்கரன்.
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 8:31 PM

கல்வராயன் மலைக் கிராமங்களில் அதிமுக வேட்பாளா் ஏ.பி.ஜெயசங்கரன் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்குள்பட்ட கருமந்துறை, கரியகோயில், மேல்நாடு ஊராட்சி, செங்காட்டு புத்தூா், ஆல்லரிப்பட்டி, மேல்வள்ளம், தாழ்வள்ளம், பகடுப்பட்டு, குன்னூா் உள்ளிட்ட மலைக் கிராமங்களில் ஆத்தூா் (தனி) தொகுதி அதிமுக வேட்பாளா் ஏ.பி.ஜெயசங்கரன் அதிமுக தோ்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அவருடன், சேலம் புகா் மாவட்ட அதிமுக செயலாளா் ஆா்.இளங்கோவன், பாஜக சேலம் கிழக்கு மாவட்டத் தலைவா் சண்முகநாதன், பாமக மாவட்டச் செயலாளா் ஜெயப்பிரகாஷ், தமாகா சேலம் கிழக்கு மாவட்டத் தலைவா் சொக்கலிங்கம், அமமுக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் க.சண்முகம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்றனா்.

Advertisement