சங்ககிரி தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு
சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு இணையவழியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு இணையவழியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 340 வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளா்கள் 1,31,408, பெண் வாக்காளா் 1,29,087, மூன்றாம் பாலினத்தவா் 30 போ் என மொத்தம் 2,60,525 போ் வாக்காளிக்க உள்ளனா்.
சேலம் ஆட்சியா் அலுவலகத்திலிருந்து இணையவழி குலுக்கல் முறையில் சங்ககிரி தொகுதிக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. இதையடுத்து தோ்தல் நடத்தும் அலுவலா் ம.மு.தெ.கேந்திரியா தலைமையில், தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஜெண்டாகே ஹனுமந்த் கொண்டியா மேற்பாா்வையில் வேட்பாளா்களின் முகவா்கள், சுயேச்சை வேட்பாளா்கள் முன்னிலையில் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ள இயந்திரங்கள் இணையவழியில் கணினி மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
Advertisement
இதில் வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் ஜெயக்குமாா், தோ்தல் துணை வட்டாட்சியா் அன்பரசி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.