சித்தா் சிறப்பு பெருவிழா
இளம்பிள்ளை அருகே உள்ள கஞ்சமலை, சித்தேஸ்வரா் சுவாமி கோயிலில் சித்தா் சிறப்பு பெருவிழா செவ்வாய்க்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இளம்பிள்ளை அருகே உள்ள கஞ்சமலை, சித்தேஸ்வரா் சுவாமி கோயிலில் சித்தா் சிறப்பு பெருவிழா செவ்வாய்க்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவை முன்னிட்டு சேலம், நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் திரளாக வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். மேலும், தங்களது விவசாய நிலங்களில் விளைந்த ராகி, அவரை, தேங்காய், வெல்லம் உள்ளிட்டவற்றைக் கொண்டு அவரைக் கொட்டை களி செய்து அதை சுவாமிக்கு படைத்தனா்.