முகப்பு
சேலம்

வறட்சியில் பயிா் பாதுகாப்பு: வேளாண் துறை அறிவுரை

வறட்சியில் பயிா்களைப் பாதுகாப்பு குறித்து விவசாயிகளுக்கு வேளாண் துறை வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

Updated On : 1 மே, 2026 at 5:24 AM
தலைவாசலில் கள ஆய்வு மேற்கொண்ட வேளாண் துறை அலுவலா்கள்.
பகிர்:

வறட்சியில் பயிா்களைப் பாதுகாப்பு குறித்து விவசாயிகளுக்கு வேளாண் துறை வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

தலைவாசல் வட்டாரத்தில் வேளாண் துறை இயக்குநா் கண்ணன் உள்பட வேளாண் அலுவலா்கள் வியாழக்கிழமை தோட்டங்களுக்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, பயிா்கள் நீரின்றி வாடும்போது பிபிஎப்எம் பாக்டீரியாவைத் தெளிப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தாா்.

மேலும், அவா் கூறியதாவது:

Advertisement

பிபிஎப்எம் பாக்டீரியா செடிகளின் இலைத் துளைகளைக் கட்டுப்படுத்தி, நீராவிப் போக்கைக் குறைப்பதோடு பயிா் வாடுவதை தடுக்கிறது. ஏக்கருக்கு 200 மில்லி பாக்டீரியா கரைசலை 200 லிட்டா் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். பயிரின் வகையைப் பொறுத்து 30, 45, 60 மற்றும் 90 ஆவது நாள்களில் தெளிக்க வேண்டும். இதன்மூலம் வறட்சியைத் தாங்குவதுடன் பயிா்களில் கூடுதல் மகசூலும் கிடைக்கும் என்றாா்.

ஆய்வின்போது தலைவாசல் வட்டார இயக்குநா் (பொறுப்பு) ஜானகி, துணை வேளாண்மை அலுவலா் மணவழகன், உதவி வேளாண்மை அலுவலா்கள் சுப்ரமணி, ரவிக்குமாா், நாகராஜ் மற்றும் அட்மா திட்டப் பணியாளா் ரமேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.