முகப்பு
இந்தியா

ஹோட்டல்களில் "எல்பிஜி கட்டணங்கள்' விதிக்கக் கூடாது: மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அறிவுரை

உணவகங்களில் "எல்பிஜி கட்டணங்கள்' மற்றும் அது போன்றவற்றை விதிப்பது தொடர்பான நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைத் தடுக்கும் வகையில் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) அறிவுரை வழங்கியுள்ளது.

Updated On : 26 மார்ச் 2026, 5:23 am IST
பகிர்:

நமது நிருபர்

உணவகங்களில் "எல்பிஜி கட்டணங்கள்' மற்றும் அது போன்றவற்றை விதிப்பது தொடர்பான நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைத் தடுக்கும் வகையில் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) அறிவுரை வழங்கியுள்ளது.

இந்த நடைமுறை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-இன் கீழ் நியாயமற்ற வர்த்தகமாகக் கருதப்படுகிறது என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisement

இது தொடர்பாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்திருப்பதாவது:

நுகர்வோர் கட்டணப் பட்டியல்களில் (பில்) எல்பிஜி கட்டணங்கள், எரிவாயு கூடுதல் கட்டணம் மற்றும் எரிபொருள் செலவு மீட்பு போன்ற கூடுதல் கட்டணங்களை ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் விதிப்பதை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தீவிரமாகக் கவனத்தில் கொண்டுள்ளது.

இதுபோன்ற கட்டணங்கள் தானாகவே விதிக்கப்படக்கூடாது. அதை மீறுவது கடுமையான நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும்.

எரிபொருள், எல்பிஜி, மின்சாரம் மற்றும் பிற செயல்பாட்டுச் செலவுகள் போன்ற உள்ளீட்டுச் செலவுகள் ஒரு வணிகத்தை நடத்துவதற்கான செலவின் ஒரு பகுதியாகும். அவை உணவுப் பட்டியலிலுள்ள பொருள்களின் விலையில் சேர்க்கப்பட வேண்டும் என்றும் சிசிபிஏ தெளிவுபடுத்தியுள்ளது.

அத்தகைய செலவுகளைத் தனித்தனியான கட்டாயக் கட்டணங்கள் மூலம் வசூலிப்பது, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-இன் பிரிவு 2(47)இன் கீழ், நியாயமற்ற வர்த்தக நடைமுறையாகும்.

இதுபோன்ற கூடுதல் கட்டணத்தால் பாதிக்கப்படும் நுகர்வோர், 1915 என்ற எண்ணைத் தொடர்புகொண்டோ அல்லது தேசிய நுகர்வோர் ஹெல்ப்லைன் கைப்பேசி செயலி மூலமோ தேசிய நுகர்வோர் உதவி மையத்தில் புகார் பதிவு செய்யலாம்.

ங்-ஒஹஞ்ழ்ண்ற்ண் இணையதளத்திலும் புகாரைப் பதிவு செய்யலாம். மாவட்ட ஆட்சியரிடமோ அல்லது நேரடியாக சிசிபிஏவிடமோ புகார் அளிக்கலாம். அந்தப் புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.