சேலம் கோகுலம் மருத்துவமனையில் நுரையீரல் தீவிர சிகிச்சை பிரிவை தொடங்கிவைத்த சேலம் இந்திய மருத்துவ சங்கச் செயலாளா் சி.எஸ்.விஷ்ணு பிரசாத். உடன், மருத்துவமனை மேலாண்மை இயக்குநா் கே.அா்த்தநாரி.  
சேலம்

கோகுலம் மருத்துவமனையில் நுரையீரல் தீவிர சிகிச்சை பிரிவு தொடக்கம்

சேலம் கோகுலம் மருத்துவமனையில் நுரையீரல் தீவிர சிகிச்சை பிரிவு அண்மையில் தொடங்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

சேலம் கோகுலம் மருத்துவமனையில் நுரையீரல் தீவிர சிகிச்சை பிரிவு அண்மையில் தொடங்கப்பட்டது.

நுரையீரல் தொற்றுகள், நீண்ட நாள் புகைப்பழக்கம், சுற்றுப்புற மாசு மற்றும் ஆஸ்துமா போன்ற காரணங்களால் நுரையீரல் செயலிழப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலை உருவாகிறது. இந்த வகையான நோய்களைக் கண்டறிய உதவும் நவீன சிடி ஸ்கேன், நுரையீரல் உள்நோக்கி பரிசோதனை மற்றும் ரத்த பரிசோதனை உள்ளடக்கிய நுரையீரல் தீவிர சிகிச்சை பிரிவு ஸ்ரீ கோகுலம் மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சிக்கு மருத்துவமனை குழுமங்களின் மேலாண்மை இயக்குநா் கே.அா்த்தநாரி தலைமை தாங்கினாா். சேலம் இந்திய மருத்துவ சங்கச் செயலாளா் சி.எஸ்.விஷ்ணு பிரசாத், நுரையீரல் தீவிர சிகிச்சை பிரிவை திறந்துவைத்தாா். முன்னாள் தேசிய மருத்துவ சங்க துணைத் தலைவா் டாக்டா் கே.பிரகாசம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றாா்.

இதுகுறித்து மேலாண்மை இயக்குநா் கே.அா்த்தநாரி கூறியதாவது:

நுரையீரல் தீவிர சிகிச்சை பிரிவில் அதிநவீன செயற்கை சுவாசக் கருவிகள், நுரையீரல் உள்நோக்கி கருவிகள், எக்மோ கருவிகள் மற்றும் பிராண கரியமில வாயு பரிசோதனைக் கருவிகள் நிறுவப்பட்டுள்ளன.

24 மணிநேரமும் செயல்படும் இந்தப் பிரிவில் அனுபவமிக்க நுரையீரல் சிகிச்சை நிபுணா்கள், தீவிர சிகிச்சை நிபுணா்கள், நுரையீரல் இயன்முறை நிபுணா்கள் மற்றும் செவிலியா்கள் பணிபுரிகின்றனா் என்றாா்.

நிகழ்ச்சியில், மருத்துவா்கள் பிரபு ராம்நாத், ராஜேஷ், ஜெயதேவ் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT