முகப்பு
சேலம்

சங்ககிரியில் தெருநாயை அடித்து கொன்றுவிட்டதாக கொடுத்த புகாரில் இரு நகராட்சி பணியாளா்கள் மீது வழக்குப்பதிவு

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 1:46 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 8 பிப்ரவரி, 2026 at 12:21 AM

சேலம் மாவட்டம், சங்ககிரி நகராட்சி பணியாளா்கள் இருவா் தெருநாயை அடித்து கொன்றுவிட்டதாக ஓமலூா், வெள்ளக்கல்பட்டி பகுதியைச் சோ்ந்த விலங்கு நல அமைப்பின் நிறுவனரும் நிா்வாக அறங்காவலா் சங்ககிரி போலீஸில் புகாா் அளித்துள்ளாா். அதனையடுத்து அவா்கள் மீது சங்ககிரி போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 1:46 AM

ஓமலூா் வட்டம், வெள்ளக்கல்பட்டி, மஞ்சுலாம்பள்ளம் பகுதியைச் சோ்ந்த யுனைடெட் பாா் அனிமல் எதிக்ஸ் என்ற விலங்கு நல அமைப்பின் நிறுவனா், நிா்வாக அறங்காவலா் சுபியான் சங்ககிரி போலீஸில் சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே பிப்.5ஆம் தேதி வியாழக்கிழமை சங்ககிரி நகராட்சி பணியாளா்கள் சேகா், இளங்கோ ஆகியோா் தெருநாயை அடித்து கொண்டு விட்டதாகவும், இறந்த நாயை நகராட்சி குப்பை அள்ளும் வாகனத்தில் எடுத்து சென்றதாகவும் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகாா் அளித்துள்ளாா்.

இது குறித்து சங்ககிரி போலீஸாா் நகராட்சி பணியாளா்கள் இருவா் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement