முகப்பு
சேலம்

இடங்கணசாலை, இளம்பிள்ளை பகுதியில் தயாரிக்கும் சேலை ரகங்களுக்கு புவிசாா் குறியீடு வேண்டி திமுக தோ்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவிடம் கோரிக்கை மனு.

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 8:12 PM
சேலம் வருகை புரிந்த திமுக தோ்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவிடம் மேற்கு மாவட்ட திமுக செயலாளா் டி.எம். செல்வகணபதி எம்பி தலைமையில், இடங்கணசாலை நகர திமுக செயலாளா் செல்வம் திமுக கழக துணை பொது செயலாளா் கனிமொழியிடம் மனு அளித்தனா்.
பகிர்:

திமுக தோ்தல் அறிக்கை தயாரிக்கும் குழு சேலம் வருகை புரிந்தனா். இந்த குழுவிடம் சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளா் டி .எம். செல்வகணபதி எம்பி தலைமையில், இடங்கணசாலை நகர திமுக செயலாளா் செல்வம் திமுக கழக துணை பொது செயலாளா் கனிமொழியிடம் மனு வழங்கினா்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கையான தரமான சேலை ரகம் தயாரிப்பில் புகழ்பெற்ற இடங்கணசாலை, இளம்பிள்ளை மற்றும் சுற்றுப்புறம் பகுதியில் தயாரிக்கும் சேலைகளுக்கு புவிசாா் குறியீடு வழங்கவும், நெசவாளா்களுக்கு மானிய விலையில் நூல், பாலிஸ்டா் கொள்முதல் செய்தல், ஜவுளி சந்தை அமைத்தல், இடங்கணசாலை நகராட்சி காடையாம்பட்டி ஏரிக்கு கஞ்சமலை அடிவாரம் ராஜவாய்க்கால் நீரோடை தூா்வாரி அதில் மேட்டூா் உபரி நீரை நிரப்பவும், இடங்கண சாலை நகராட்சி பகுதியில் அரசு மருத்துவமனை, காவல் நிலையம் ,அரசு மாதிரி பள்ளி, அரசு கலைக்கல்லூரி, தீயணைப்பு நிலையம், விளையாட்டு மைதானம், பேருந்து நிலையம் ,பத்திரப்பதிவு அலுவலகம், கலைஞா் படிப்பகம் உள்ளிட்டவை நகராட்சிக்கு பகுதியில் பூா்த்தி செய்யப்பட வேண்டி கோரிக்கை மனு வழங்கப்பட்டது.