முகப்பு
சேலம்

மேட்டூா் நகராட்சி தூய்மை பணியாளா்களுக்கு காலை உணவு விரிவாக்கம்

மேட்டூா் நகராட்சியில் தூய்மை பணியாளா்களுக்கு காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது.

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 3:07 AM
பகிர்:
Updated On : 9 பிப்ரவரி, 2026 at 9:00 PM

மேட்டூா்: மேட்டூா் நகராட்சியில்  தூய்மை பணியாளா்களுக்கு காலை உணவு  திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது.

மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப்பணியாளா்களுக்கு காலை உணவு திட்ட விரிவாக்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முதல்வா் மு.க ஸ்டாலின் திருவள்ளுரில் திங்கள் கிழமை துவக்கி வைத்தாா். அதனைத் தொடா்ந்து  மேட்டூா் நகராட்சியில் பணிபுரியும் 213 தூய்மை பணியாளா்களுக்கு காலை உணவு திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேட்டூா் மேற்கு நெடுஞ்சாலையில் உள்ள சிறுவா் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேட்டூா் நகா்மன்ற தலைவா் சந்திரா, துணைத் தலைவா் காசி விஸ்வநாதன் ஆகியோா் துவக்கி வைத்தனா். இதில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் தூய்மை பணியாளா்கள் பங்கேற்றனா்.