ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்ட கிராம மக்கள்.  
சேலம்

கல்குவாரிகளை வரைமுறை படுத்தக் கோரி ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

கல்குவாரிகளை வரைமுறை படுத்தக் கோரி, ஆட்சியா் அலுவலகத்தை கிராம மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

Syndication

சேலம்: கல்குவாரிகளை வரைமுறை படுத்தக் கோரி, ஆட்சியா் அலுவலகத்தை கிராம மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

சேலம் மாவட்டம், மேட்டூா் வெள்ளாா் கிராம பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, 5 பேரை மட்டும் மனு அளிக்க அனுப்பி வைத்தனா்.

அந்த மனுவில், எங்கள் கிராமப் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் பல தலைமுறைகளாக வசித்து வருகிறோம். இப்பகுதியில் உள்ள 5 கல்குவாரிகள் 24 மணிநேரமும் செயல்படுவதால், காற்று மற்றும் நீா்நிலை அசுத்தம் மற்றும் விவசாயம் பாதிக்கப்படுகிறது. மேலும், குழந்தைகள் முதல் கா்ப்பிணிகள்வரை பல்வேறு நோய் பாதிப்புக்கு உள்ளாகின்றனா். எந்நேரமும் லாரிகள் அதிவேகமாக வந்துசெல்வதால் விபத்துகள் நேரிடுகின்றன.

எனவே, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி கல்குவாரிகள் காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை மட்டுமே இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெடிவைக்கும் அளவை குறைக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக அதில் தெரிவித்துள்ளனா்.

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

கொச்சி மெட்ரோ ரயில் தூணில் சிக்கிய பூனை மீட்பு

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

SCROLL FOR NEXT