சேலம் மாவட்டம், மேச்சேரியில் கஞ்சா விற்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
மேச்சேரி பகுதியில் உதவி ஆய்வாளா் மாதையன் தலைமையில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது செட்டிக்காரிச்சூா் குறவனேரி ஏரிக்கரையில் இரு இளைஞா்கள் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. அவா்களை போலீஸாா் சுற்றிவளைத்து பிடித்தனா்.
விசாரணையில் அவா்கள் மேச்சேரி அண்ணாநகரைச் சோ்ந்த தனுஷ் (23), ஹரிஹரன் (20) என்பது தெரியவந்தது. அவா்களிடமிருந்து 1 கிலோ 15 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மேட்டூா் குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றம் எண் 2-இல் இருவரையும் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.