முகப்பு
சேலம்

வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 5:14 AM
பகிர்:
Updated On : 12 பிப்ரவரி, 2026 at 10:15 PM

மகுடஞ்சாவடி ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பில் நிழல்கூடம், கோட்டைமேடு பகுதியில் ரூ. 7 லட்சம் மதிப்பில் நிழற்கூடம் என மொத்தம் ரூ. 55 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகளை பூமிபூஜை செய்து சங்ககிரி எம்எல்ஏ சுந்தரராஜன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் மகுடஞ்சாவடி வடக்கு ஒன்றிய செயலாளா் செல்வகுமாா் (எ) மணிகண்டன், தெற்கு ஒன்றிய செயலாளா் சௌந்தரராஜன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளா் நாகராஜ், ஒன்றிய முன்னாள் கவுன்சிலா் ஜோதி தங்கவேல், வடக்கு ஒன்றிய அவை தலைவா் கோவிந்தன் மற்றும் சதீஷ்குமாா், சிவக்குமாா், ஜெகதீஸ், ரமேஷ் உள்பட பலா் பங்கேற்றனா்.