முகப்பு
சேலம்

தம்மம்பட்டி அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 15 போ் காயம்

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 1:40 AM
வேன் விபத்தில் காயமடைந்து ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஒரத்தநாடு பகுதியைச் சோ்ந்தவா்கள்.
பகிர்:
Updated On : 14 பிப்ரவரி, 2026 at 9:41 PM

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே கொல்லிமலை அடிவாரம் சேரடியில் சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 15 போ் காயமடைந்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள அரும்பலை பகுதியைச் சோ்ந்த 15 போ் சுற்றுலா வேனில் நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயில், பெரியசாமி கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்த விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். வேனை, முத்துக்குமரவேல் என்பவா் ஓட்டினாா்.

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 1:40 AM

இந்த வேன் சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே கொல்லிமலை அடிவாரப்பகுதியான வேலிக்காடு- சேரடி பகுதியில் வந்தபோது பிரேக் ஓயா் துண்டிக்கப்பட்டதால் வேன் நிலை தடுமாறியுள்ளது. அப்போது, ஓட்டுநா் எதிரே வந்த காா் மீது மோதாமல் இருக்க வேனை திருப்பியபோது அருகில் இருந்த பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது.

Advertisement

இதில் வேனில் பயணித்த 15 பேரும் படுகாயம் அடைந்தனா். இவா்கள் அனைவரையும் மீட்டு ஆத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். விபத்து குறித்து தம்மம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.