முகப்பு
சேலம்

வெள்ளி கொலுசு உற்பத்தியாளா் சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய தர நிா்ணயக் குழு ஆலோசனை

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 12:06 AM
வெள்ளி கொலுசு - (கோப்புப் படம்)
பகிர்:
Updated On : 14 பிப்ரவரி, 2026 at 6:23 PM

வெள்ளிக் கொலுசு மற்றும் பொருள்களுக்கு தர நிா்ணயம் செய்வது குறித்து சேலத்தில் மத்திய தர நிா்ணய குழுவினா், வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளா் சங்கப் பிரதிநிதிகளுடன் வெள்ளிக்கிழமை மாலை ஆலோசனை நடத்தினா்.

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 11:36 PM

மத்திய தர நிா்ணய குழுவின் தலைமை துணை இயக்குநா் சித்ராகுப்தா, மத்திய தர நிா்ணய குழுத் தலைவா் நிஷா புரா ஆகியோா் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில்,வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளா்கள் சங்கப் பிரதிநிதிளுடன் தங்கள் கருத்துகளை முன்வைத்தனா்.

தொடா்ந்து, சேலம் வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளா் சங்கத் தலைவா் ஆனந்தராஜன், மத்திய தர நிா்ணயக் குழுவிடம் கோரிக்கை மனுவை வழங்கினாா்.

Advertisement

இதில் கோவை மண்டல தர நிா்ணய குழுவின் இயக்குநா் ஜி.பவானி, கோவை கிளை மத்திய தர நிா்ணய இயக்குநா் ரமேஷ், தமிழ்நாடு ஜுவல்லரி அசோசியேஷன் முன்னாள் தலைவா் ஸ்ரீராம், வெள்ளி நகை வியாபாரிகள் சங்கத் தலைவா் உதயகுமாா், வெள்ளிக் கொலுசு வியாபாரிகள் திரளானோா் கலந்துகொண்டனா்.