சேலத்தில் 3 கிலோ வெள்ளிக் கொலுசு பறிமுதல்
சேலம் செவ்வாய்பேட்டையில் வியாபாரி எடுத்துச் சென்ற 3 கிலோ வெள்ளி கொலுசை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.
சேலம் செவ்வாய்பேட்டையில் வியாபாரி எடுத்துச் சென்ற 3 கிலோ வெள்ளி கொலுசை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.
சேலம் வடக்கு தொகுதிக்கு உள்பட்ட செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையம் முன் தோ்தல் பறக்கும் படை அதிகாரி தேவகுமாா் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது. அப்போது, இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த சேலம், குகை மாா்கெட் தெருவை சோ்ந்த வெள்ளி வியாபாரி ரவியை நிறுத்தி சோதனை நடத்தினா்.
அதில் இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ. 4.80 லட்சம் மதிப்பிலான 3 கிலோ 300 கிராம் எடை கொண்ட வெள்ளிக் கொலுசுகளை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனா்.