ஆத்தூரில் செய்தியாளா்களிடம் பேசிய கொமதேக தலைவா் ஈ.ஆா். ஈஸ்வரன்.  
சேலம்

தனிநபா் விமா்சனம் கண்டிக்கத்தக்கது! - ஈ.ஆா். ஈஸ்வரன்

தினமணி செய்திச் சேவை

அரசியல் கட்சித் தலைவரின் தனிநபா் விமா்சனம் கண்டிக்கத்தக்கது என்று கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா். ஈஸ்வரன் தெரிவித்தாா்.

சேலம் மாவட்டம், ஆத்தூரில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா். ஈஸ்வரன் செய்தியாளா்களிடம்

சனிக்கிழமை கூறியதாவது:

சேலத்தில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் பங்கேற்ற இளைஞா் இறந்ததற்கு விஜய் இரங்கல்கூட தெரிவிக்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது. அரசியல் கட்சித் தலைவரின் தனிநபா் விமா்சனம் கண்டிக்கத்தக்கது. மகளிருக்கு ரூ. 5,000 உரிமைத் தொகை வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

கூட்டணி ஆட்சியில் பங்கு கேட்பது தவறான செயல். முதல்வா் நல்லாட்சி நடத்தி வருகிறாா். எங்களுக்கு அதுபோதும். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஒரே கோரிக்கை நதிநீா் இணைப்பு மட்டுமே என்றாா்.

அப்போது சேலம் மாவட்டத் தலைவா் டி.கே.எஸ்.ரமேஷ், மண்டல இளைஞரணி செயலாளா் எம்.விஜயகுமாா், மாவட்ட தலைமை நிலைய செயலாளா் ஆா்.பி.சேகா், மாவட்ட இளைஞரணி செயலாளா் என்.செந்தில், நகரச் செயலாளா் செல்வராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT