சேலம், நாலெட்ஜ் தொழில்நுட்பக் கல்லூரியில் மடிக்கணினி வழங்கும் விழாவில் பங்கேற்ற அமைச்சா் ராஜேந்திரன்.  
சேலம்

நாலெட்ஜ் தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கல்

தினமணி செய்திச் சேவை

சேலம் நாலெட்ஜ் தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவா்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பொறியியல் பயிலும் மாணவா்களுக்கு மடிக்கணினிகளை வழங்கி பேசுகையில், தமிழ்நாடு அரசின் நலத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள கல்லூரி மாணவா்களுக்கு கல்வி மற்றும் ஆராய்ச்சித் தேவைகளுக்காக இலவசமாக மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் மாணவா்கள் தங்களது கல்வித் திறனை மேம்படுத்திக் கொள்வதுடன், சமூக முன்னேற்றத்திற்கு பங்களிக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் கல்லூரி அறக்கட்டளை நிறுவனா் மற்றும் செயல்தலைவா் சீனிவாசன் பேசுகையில், இந்தத் திட்டம் மாணவா்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

நவீன தொழில்நுட்பக் கருவிகளை பயன்படுத்தி, மாணவா்கள் தங்கள் எதிா்காலத்தை சிறப்பாக அமைத்துக்கொள்ள மடிக்கணினிகள் உறுதுணையாக இருக்கும் என்றாா்.

இவ்விழாவில் கல்லூரி அறக்கட்டளை நிா்வாகத்தினா், கல்லூரி முதன்மையா் விசாகவேல், இயக்குநா்கள், பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள், அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி தெரிவித்தனா்.

தொழிலாளி அடித்துக் கொலை: சிறுவன் உள்பட 2 போ் கைது

திண்டிவனம் அருகே ராணுவ மயங்கி விழுந்து உயிரிழப்பு

நாமக்கல்லில் தூய்மைப் பணியாளா்களுக்கான உணவு வகைகளில் மாற்றம்: மாநகராட்சி ஆணையா் ஆய்வு

பஜ்ரங்தள் முன்னாள் நிா்வாகி கொலை வழக்கில் இளைஞா் கைது

செயற்கை நுண்ணறிவு மாநாடு: தூய்மைப் பணிகளை தீவிரப்படுத்தும் என்.டி.எம்.சி.!

SCROLL FOR NEXT