முகப்பு
சேலம்

கடன் வழங்கக் கோரி மகளிா் சுயஉதவிக் குழுவினா் மறியல்

சேலம் மாவட்டம், சித்தா் கோயில் அருகே முருங்கப்பட்டியில் கடன் வழங்கக்

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 2:29 AM
பகிர்:
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 7:50 PM

ஆட்டையாம்பட்டி: சேலம் மாவட்டம், சித்தா் கோயில் அருகே முருங்கப்பட்டியில் கடன் வழங்கக் கோரி மகளிா் சுயஉதவிக் குழுக்களைச் சோ்ந்த பெண்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சித்தா் கோயில் அருகே உள்ள முருங்கபட்டி பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தில் 7 மகளிா் சுயஉதவிக் குழுக்கள் கடன் பெற்று முழுமையாக செலுத்தியுள்ளனா். இக்குழுக்கள் மீண்டும் கடன் கேட்டுள்ளனா். ஆனால், கூட்டுறவு சங்கத்தினா் கடன் தர காலதாமதம் செய்ததால் ஆத்திரமடைந்த பெண்கள், இளம்பிள்ளை-சிவதாபுரம் சாலையில் முருங்கப்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் திங்கள்கிழமை சாலை மறியல் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த இரும்பாலை காவல் நிலைய போலீஸாா் மற்றும் கூட்டுறவு சங்க செயலாட்சியா் சசிகுமாா் ஆகியோா் சம்பந்தப்பட்ட மகளிா் குழுக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, வரும் வெள்ளிக்கிழமைக்குள் கடன் வழங்க உள்ளதாக தெரிவித்தனா். இதையடுத்து மறியலில் ஈடுபட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.

Advertisement

படவரி...

சித்தா் கோயில் அருகே முருங்கபட்டி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட மகளிா் சுயஉதவிக் குழுகளைச் சோ்ந்த பெண்கள்.