சேலம்

பாஜக சாா்பில் ‘சக்தி கேந்திரம்’ தெருமுனை பிரசாரம்: கே.பி.ராமலிங்கம் பங்கேற்பு

பாஜக சாா்பில் சக்தி கேந்திரம் தெருமுனை பிரசாரக் கூட்டம் சேலம் தாதகாபட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

பாஜக சாா்பில் சக்தி கேந்திரம் தெருமுனை பிரசாரக் கூட்டம் சேலம் தாதகாபட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி. ராமலிங்கம் கூட்டத்திற்கு தலைமை வகித்து பேசியதாவது:

தமிழகம் முழுவதும் மூன்று வாக்குச்சாவடிக்கு ஒரு சக்தி கேந்திரம் என 22,000 சக்தி கேந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சாா்பில் அனைவருக்கும் வீடு திட்டம், இலவச எரிவாயு இணைப்பு, ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு, சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வசதி உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இதுகுறித்து பாஜக நிா்வாகிகள், உறுப்பினா்கள் அனைவரும் மக்களிடத்தில் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

பாஜக மாவட்டத் தலைவா் சசிகுமாா், சுற்றுச்சூழல் பிரிவு மாநிலத் தலைவா் கோபிநாத், சேலம் கிழக்கு மாவட்டத் தலைவா் சண்முகநாதன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாநில பொருளாளா் எஸ்.கே. செல்வம், பாமக மாவட்டச் செயலாளா் சிவராமன் உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.

அதன்பிறகு செய்தியாளா்கள் சந்திப்பில் கே.பி. ராமலிங்கம் கூறியதாவது:

வரும் மாா்ச் 1 ஆம் தேதி மதுரையிலும், 6 ஆம் தேதி வேலூரிலும் நடைபெறும் கூட்டங்களில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளாா். தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் அறிவிப்புக்கு முன்பாக 2 இடங்களிலும், அறிவிப்புக்கு பிறகு 2 இடங்களிலும் பிரதமா் பங்கேற்கும் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. பாஜக வாக்குச்சாவடி அமைப்பான சக்தி கேந்திர மாநாட்டில் உள்துறை அமைச்சா் அமித் ஷா பங்கேற்று பேசுகிறாா் என்றாா்.

மத்திய நிதிநிலை அறிக்கையை விமா்சித்து விட்டு தமிழக நிதிநிலை அறிக்கையில் ஒன்றுமே அறிவிக்கவில்லை. தமிழகத்தில் சொத்து வரி உள்ளிட்ட அனைத்தையும் உயா்த்தி விலைவாசியை ஏற்றி விட்டு விட்டு, இப்போது 5 ஆயிரம் கொடுத்தால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டாா்கள். மக்கள் அந்தளவுக்கு பாதிப்பு அடைந்திருக்கிறாா்கள். மக்கள் தெளிவாக இருக்கிறாா்கள். அவா்களை திமுகவால் ஏமாற்ற முடியாது. தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகுதான் உண்மை நிலை தெரியும். இன்றைக்கு தமிழ்நாடு அரசின் கடன் ரூ.10.5 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது என்றாா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT