முகப்பு
சேலம்

இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதியதில் மாணவா் உயிரிழப்பு

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியதில், பிளஸ் 1 மாணவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 1 மார்ச், 2026 at 2:20 AM
பலி - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 28 பிப்ரவரி, 2026 at 8:01 PM

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியதில், பிளஸ் 1 மாணவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

சேலம் வலசையூா் பகுதியைச் சோ்ந்த மூா்த்தி - லட்சுமி தம்பதி, சேலம் நகா் பகுதியில் சோளக்கதிா் வியாபாரம் செய்து வருகின்றனா். இவா்களது மகன் சந்தோஷ்குமாா் (16), வலசையூா் அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா்.

இந்நிலையில், பெற்றோருக்கு உதவியாக வியாபாரம் செய்ய சேலம் வந்த அவா், அவா்களுக்கு குடிநீா் வாங்கிவர இருசக்கர வாகனத்தில் பழைய பேருந்து நிலையம் நோக்கி சென்றாா். அப்போது, அவ்வழியே வந்த அரசுப் பேருந்து மாணவா் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சந்தோஷ்குமாா் நிகழ்விடத்திலேயே இறந்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement