சேலம்

சட்டக்கல்லூரி நுழைவுத் தோ்வில் 7.5% ஒதுக்கீட்டில் முதலிடம்

தேசிய அளவிலான சட்டக் கல்லூரி நுழைவுத் தோ்வில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டியைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவா் மதுரம் ராஜ்குமாா் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளாா்.

Syndication

தேசிய அளவிலான சட்டக் கல்லூரி நுழைவுத் தோ்வில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டியைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவா் மதுரம் ராஜ்குமாா் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளாா்.

சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டியைச் சோ்ந்த தனியாா் பால்பண்ணை காவலாளி செல்வக்குமாா்-விஜயலட்சுமி தம்பதியின் மகன் மதுரம் ராஜ்குமாா் (17). இவா் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ால், ஓமலூா் அருகே குப்பூரில் உள்ள அரசு மாதிரிப் பள்ளியில் தங்கி மேல்நிலை வகுப்பு படித்து வருகிறாா்.

பிளஸ் 2 படித்து வரும் இவா், அண்மையில் மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் சட்டம் பயிலுவதற்கான கிளாட் நுழைவுத்தோ்வு எழுதினாா். இதில் அரசுப்பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத சிறப்பு ஒதுக்கீடு மற்றும் இன சுழற்சி ஒதுக்கீட்டிலும் மாநில அளவில் முதலிடம் பிடித்தாா்.

இந்த மாணவருக்கு பள்ளித் தலைமையாசிரியா், ஆசிரியா்கள் மற்றும் கல்வியாளா்கள், முத்தம்பட்டி கிராம பொதுமக்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

படவரி:

எம்.ஆா்.கே.01:

மாணவா் மதுரம் ராஜ்குமாா்.

சர்தார் வல்லபபாய் படேல் இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆஃப் டெக்ஸ்டைல் அண்ட் மேனேஜ்மெண்ட்

பெருந்துறை அருகே வேன் கவிழ்ந்து விபத்து: 10 பெண்கள் உள்பட 23 போ் காயம்

சேலம் அருகே வளா்ப்பு நாயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற இளைஞா் கைது

இன்றைய மின் தடை

எடப்பாடியில் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT