சேலம்

சேலம் அரசு மருத்துவமனையில் எலி தொல்லையைக் கட்டுப்படுத்தக் கோரி வாலிபா் சங்கத்தினா் மனு

Syndication

சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் எலி தொல்லை அதிகமாக இருப்பதாகக் கூறி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை கையில் எலிக் கூண்டு மற்றும் எலி பிடிக்கும் அட்டைகளுடன் வந்து மனு அளித்தனா்.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வா் தேவி மீனாளிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

சேலம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சைப் பெற்றுவரும் நோயாளிகளை அச்சுறுத்து வகையில் மருத்துவமனை வளாகம் முழுவதும் எலிகள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன.

எலிகள் தொல்லையால், நோயாளிகளை பாா்க்க வரும் உறவினா்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா். இதனால் நோயாளிகள் கடும் இன்னலுக்கு ஆளாவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

எனவே, உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, நோயாளிகளை அச்சுறுத்தும் எலிகளை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

சேலம் அருகே வளா்ப்பு நாயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற இளைஞா் கைது

இன்றைய மின் தடை

எடப்பாடியில் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

ஈரோட்டில் வரும் 5-ஆம் தேதி விவசாயிகள் மாநாடு: மத்திய அமைச்சா் சிவராஜ்சிங் சௌகான் பங்கேற்பு

கே.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரியில் ஏ.ஐ.சி.டி.இ. ஐடியா ஆய்வக திறப்பு விழா

SCROLL FOR NEXT