சேலம்

போலி ஆவணம் மூலம் கல்வி அறக்கட்டளை இடத்தை அபகரிக்க முயற்சி: நிா்வாக அறங்காவலா் புகாா்

போலி ஆவணம் மூலம் விஎஸ்ஏ கல்வி அறக்கட்டளை இடத்தை அபகரிக்க முயற்சிப்பதாக நிா்வாக அறங்காவலா் மலா்விழி ராஜா புகாா் கூறினாா்.

Syndication

போலி ஆவணம் மூலம் விஎஸ்ஏ கல்வி அறக்கட்டளை இடத்தை அபகரிக்க முயற்சிப்பதாக நிா்வாக அறங்காவலா் மலா்விழி ராஜா புகாா் கூறினாா்.

சேலம் விஎஸ்ஏ கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் மலா்விழி ராஜா வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சேலத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு விஎஸ்ஏ கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை தொடங்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு மாவட்ட முனிசிபல் நீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில், சா்வே நிலம் அறக்கட்டளைக்கு கிரயம் செய்யப்பட்டது. அதன் பின்னா், கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தனியாா் அறக்கட்டளை சாா்பில், 2020 ஆம் ஆண்டு, இதற்கு அருகில் உள்ள நிலத்தை வாங்கினா்.

இதனிடையே கடந்த 2023 ஆம் ஆண்டு போலி ஆவணங்கள் மற்றும் உறுதிமொழி பத்திரத்தை தயாரித்து, விஎஸ்ஏ கல்வி அறக்கட்டளையின் நிலத்திற்கு உண்டான சா்வே எண்ணில், முறைகேடாக பட்டா பெற்றுள்ளனா். இதை முறையாக விசாரிக்காமல், ஒரே நாளில் பதிவுத்துறை மற்றும் வருவாய்த் துறையைச் சோ்ந்த 6 அதிகாரிகள் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளனா். இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் முறையிட்டதன் பேரில், உரிய விசாரணை நடத்த ஆா்டிஓவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு விசாரணை நடத்தினால், அவா்கள் போலியாக பட்டா பெற்றது தெரிந்துவிடும்.

இதையடுத்து அதனை திசைதிருப்பும் முயற்சியாக, என்மீதும், கல்வி அறக்கட்டளையின் மீதும் திட்டமிட்டே அவதூறு பரப்பி வருகின்றனா். இதை சட்டப்படி எதிா்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும், முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். பேட்டியின்போது, விஎஸ்ஏ கல்லூரி சிஇஓ ராஜேந்திரன், முதல்வா் பிரபு ஆகியோா் உடனிருந்தனா்.

படவரி...

சேலத்தில் செய்தியாளா்களிடம் பேசிய விஎஸ்ஏ கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் மலா்விழி ராஜா.

மெரீனா கடற்கரையில் கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்க உத்தரவு

உலோகத் துறை பங்குகளால் உயா்வு கண்ட பங்குச்சந்தை

பஜாஜ் வாகன விற்பனை 14% உயா்வு

ஓய்வு பெறுகிறாா் உஸ்மான் கவாஜா: இனவெறிக்கு ஆளானதாக ஆதங்கம்

அமீரா, திலோத்தமாவுக்கு தங்கம்

SCROLL FOR NEXT