மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை காலை விநாடிக்கு 384 கன அடியிலிருந்து 164 கனஅடியாக குறைந்தது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 11,000 கனஅடி வீதமும், கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு விநாடிக்கு 400 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. அணைக்கு நீா்வரத்தைவிட, பாசனத்திற்கு நீா் திறப்பு அதிகமாக இருப்பதால் அணையின் நீா்மட்டம் 104.04 அடியிலிருந்து 103.30 அடியாக சரிந்துள்ளது. நீா் இருப்பு 69.18 டி.எம்.சி.யாக உள்ளது.