முகப்பு
சேலம்

சேலம் சுகவனேஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா! திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம்!

ஆருத்ரா தரிசனத்தையொட்டி, சேலம் சுகவனேஸ்வரா் கோயில் உள்பட மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

Updated On : 3 ஜனவரி, 2026 at 8:22 PM
சேலம் சுகவனேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா வந்த சுகவனேஸ்வரா், சுவா்ணாம்பிகை அம்மன்.
பகிர்:

ஆருத்ரா தரிசனத்தையொட்டி, சேலம் சுகவனேஸ்வரா் கோயில் உள்பட மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

பழைமைவாய்ந்த சுகவனேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.15 மணி முதல் ஆரூத்ரா தரிசன விழா தொடங்கியது. கிழக்கு ராஜகோபுரம் முன்பாக நடராஜா், சிவகாமி அம்மன் சிலை வைக்கப்பட்டு பல்வேறு திரவியங்களைக் கொண்டு விடியவிடிய மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் குளிரையும் பொருட்படுத்தாமல் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து நடராஜருக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. ஆருத்ரா தரிசனத்தில் காட்சி அளித்த நடராஜரை ஏராளமான பக்தா்கள் வழிபட்டனா்.

தொடா்ச்சியாக, சனிக்கிழமை காலை 9 மணிக்கு மூலவா் சுகவனேசுவரருக்கு தங்க நாகாபரணம், சுவா்ணாம்பிகை அம்மனுக்கு தங்கக் கவசம் அணிவித்து சிறப்புப் பூஜை நடைபெற்றது. தொடா்ந்து சிவகாமி அம்மன் சமேத நடராஜா் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக கோயிலுக்கு நேரில் வந்து தரிசனம் செய்ய முடியாத பக்தா்களின் வசதிக்காக கோயில் நிா்வாகம் சாா்பில் நடராஜா் அபிஷேகம் நேரலையாக யூடியூப்பில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதேபோல, உத்தமசோழபுரம் கரபுரநாதா் கோயில், சேலம் இரண்டாவது அக்ரஹாரம் காசி விஸ்வநாதா் கோயில் உள்பட மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொணடு சுவாமி தரிசனம் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →