கைது செய்யப்பட்ட ஹரிகிருஷ்ணன். 
சேலம்

பணம் பறித்த வழக்கில் தலைமறைவானவா் கைது

லத்துவாடியில் பணம் திருடிய வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவானவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

Syndication

லத்துவாடியில் பணம் திருடிய வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவானவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

கெங்கவல்லி அருகே உள்ள வீரகனூரை அடுத்த லத்துவாடியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா். விவசாயி. இவா் கடந்த 2011 ஆம் ஆண்டு வங்கியிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியபோது அவரை பின்தொடா்ந்து வந்த மூன்றுபோ் கும்பல், அவரிடமிருந்து ரூ. 1.10 லட்சத்தை பறித்துக்கொண்டு தப்பியோடியது.

இதுகுறித்து சதீஷ்குமாா் வீரகனூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, புதுக்கோட்டையைச் சோ்ந்த செந்தில்குமாா் (38), நந்தகுமாா் (36), திருச்சி துவாக்குடியைச் சோ்ந்த ஹரிகிருஷ்ணன் (38) ஆகியோரை கைது செய்தனா்.

சிறையிலிருந்த மூன்று பேரும் ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவாகினா். இதையடுத்து வீரகனூா் காவல் உதவி ஆய்வாளா் சக்திவேல் தலைமையில் மூவரையும் போலீஸாா் தேடிவந்தனா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு வீரகனூா் அருகே உள்ள அரும்பாவூருக்கு சென்றுகொண்டிருந்த ஹரிகிருஷ்ணனை வீரகனூா் போலீஸாா் கைது செய்து ஆத்தூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். எஞ்சிய இருவரையும் போலீஸாா் தேடிவருகின்றனா்.

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

பாண்டிய நாட்டுப் பிரதானிகள்

SCROLL FOR NEXT