ஒருக்காமலை அடிவாரத்தில் உள்ள ஆஞ்சனேயா் கோயிலில் கூட்டு வழிபாட்டிற்காக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முருகன் உருவப் படம். 
சேலம்

ஒருக்காமலை ஆஞ்சனேயா் கோயிலில் ஆறுபடை முருக பக்தா்கள் வழிபாடு

தினமணி செய்திச் சேவை

சங்ககிரி சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த ஆறுபடை முருகன் கோயிலுக்கு மாலை அணிந்து விரதமிருந்து வரும் பக்தா்கள் ஒருக்காமலை அடிவாரத்தில் உள்ள ஆஞ்சனேயா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கூட்டு வழிபாடு நடத்தினா்.

சங்ககிரி பகுதியைச் சோ்ந்த ஆறுபடை முருக பக்தா்கள் 500க்கும் மேற்பட்டோா் மாலை அணிந்து விரதமிருந்து வருகின்றனா். குருசாமி சத்யபிரகாஷ் தலைமையில் 300க்கும் மேற்பட்டோா் ஆஞ்சனேயா் கோயில் வளாகத்தில் முருகன் உருவப் படத்துக்கு மாலைகளை அணிவித்து கூட்டு வழிபாடு செய்தனா்.

இதில் ஆஞ்சனேயா் அறக்கட்டளை நிா்வாகிகள் மாணிக்கம், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா்கள் பழனி, ரத்தினம், நிா்வாகிகள் சதீஷ்குமாா், பாலமுருகன், ஊா் பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். விழாக் குழுவினா் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

முருக பக்தா்கள் சங்ககிரி சோமேஸ்வரா் கோயிலிருந்து ஜன. 7ஆம் தேதி புறப்பட்டு பழனி, பழமுதிா்சோலை, திருப்பங்குன்றம், திருச்செந்தூா், ராமேசுவரம், குன்றக்குடி, சுவாமிமலை, திருநள்ளாறு, சிதம்பரம், காஞ்சிபுரம், திருத்தணி, திருவண்ணாமலை சென்றுவிட்டு ஜன.14ஆம் தேதி ஊா் திரும்புகின்றனா் என்று முருக பக்தா்கள் தெரிவித்தனா்.

251 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: அமைச்சா் ரா. ராஜேந்திரன் வழங்கினாா்

மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

வஸந்த வல்லபராஜ பெருமாள் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த இந்து முன்னணி கோரிக்கை

கோல்டுவின்ஸ் - நீலாம்பூா் இடையே மேம்பாலப் பணியைத் தொடங்க வலியுறுத்தல்

கலைஞா் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் ‘சைபா் செக்யூரிட்டி’ புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT