சேலம்

புகையில்லா போகி: மாநகராட்சி ஆணையா் வேண்டுகோள்

சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் புகையில்லா போகி கொண்டாட வேண்டுமென மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன்

Syndication

சேலம்: சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் புகையில்லா போகி கொண்டாட வேண்டுமென மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழா் திருநாளான பொங்கல் திருநாளுக்கு முதல்நாள் வீட்டில் உள்ள தேவையில்லா பொருள்களை எரித்து ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்ற முதுமொழியின் அடிப்படையில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

அவ்வாறு பழைய பொருள்களை எரிப்பதால் உருவாகும் நச்சு வாயுக்கள் காற்றில் கரைந்து மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. எனவே, பழைய பொருள்களை எரிப்பதை தவிா்த்து, காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும், தங்களிடம் உள்ள தேவையில்லாத பழைய பொருள்களை எரிக்காமல், அதை தூய்மைப் பணியாளா்களிடம் அளித்து புகையில்லா போகிப் பண்டிகையாக கடைப்பிடித்து சேலம் மாநகராட்சியை தூய்மையாக வைத்துக்கொள்ள ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளாா்.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT