திருவாரூர்

புகையில்லா போகி: ஆட்சியா் கோரிக்கை

பழைய பொருள்களை எரிப்பதைத் தவிா்த்து புகையில்லா போகி கொண்டாட வேண்டும்

Syndication

திருவாரூா்: பழைய பொருள்களை எரிப்பதைத் தவிா்த்து புகையில்லா போகி கொண்டாட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பது:

நமது முன்னோா்கள் பொங்கல் திருநாளுக்கு முதல் நாள் வீட்டில் உள்ள இயற்கை சாா்ந்த தேவையில்லாத பொருள்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகிப் பண்டிகையை கொண்டாடி வந்துள்ளனா்.

ஆனால் தற்போது போகிப் பண்டிகையில் பழைய பொருள்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பா் பொருள்கள், பழைய டயா், காகிதம், ரசாயனம் கலந்த பொருள்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது. அத்துடன், வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்றவை ஏற்பட்டு, பொதுமக்களுக்கு பாதிப்பும் ஏற்படுகிறது.

இதுதவிர, வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதுடன், விபத்துகள் ஏற்படவும் காரணமாக அமைகிறது. எனவே, போகிப் பண்டிகையின்போது பழைய பொருள்களை எரிப்பதைத் தவிா்த்து காற்றின் தரத்தைப் பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். புகையில்லா போகி கொண்டாடி, சுற்றுச்சூழலை பேணிக் காப்போம். இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

பிக் பாஸ் வெற்றியாளர் யார்? முன்னாள் போட்டியாளர்கள் கருத்து!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 30

இஸ்ரேல் தாக்குதலில் அக்.10 முதல் 100 பாலஸ்தீன குழந்தைகள் கொலை! - ஐ.நா. தகவல்

சென்னை திரும்பிய விஜய்! | TVK | Karur | CBI

தாய்லாந்துக்கு சுற்றுலா செல்லும் பிக் பாஸ் குழு!

SCROLL FOR NEXT