பேளூா் வாரச்சந்தையில் ஆடுகள் வாங்க, விற்க வந்தோா். 
சேலம்

பொங்கல் பண்டிகை: பேளூா் வாரச்சந்தையில் ரூ. 1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பொங்கல் பண்டிகையையொட்டி, பேளூா் வாரச்சந்தையில் ரூ. 1 கோடிக்குமேல் ஆடுகள் விற்பனை நடைபெற்றது.

Syndication

வாழப்பாடி: பொங்கல் பண்டிகையையொட்டி, பேளூா் வாரச்சந்தையில் ரூ. 1 கோடிக்குமேல் ஆடுகள் விற்பனை நடைபெற்றது.

வாழப்பாடியை அடுத்த பேளூரில் திங்கள்கிழமைதோறும் கூடும் பிரபலமான ஆட்டுச்சந்தைக்கு, வெள்ளாடு, செம்மறி, மாலா, மேச்சேரி, குரும்பா உள்ளிட்ட பல்வேறு இன ஆடுகள் 500 முதல் 750 வரை விற்பனைக்கு வருகின்றன. பண்டிகை காலங்களில் ஆயிரத்துக்கும் அதிகமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவருவா்.

சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சோ்ந்தவா்கள் மட்டுமின்றி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூா் மற்றும் தருமபுரி மாவட்ட எல்லையிலுள்ள கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள், வியாபாரிகள் வளா்ப்புக்காவும், இறைச்சிக்காவும் ஆடுகளை கொள்முதல் செய்ய பேளூா் வாரச்சந்தைக்கு வருவா்.

பொங்கல் பண்டிகையையொட்டி, இந்த வாரச்சந்தையில் அதிகாலையில் இருந்தே ஆடுகள் வாங்க கூட்டம் அலைமோதியது. இதனால், கடந்த வாரம் ரூ. 10,000 முதல் ரூ. 20,000 வரை விலை போன ஆடு இந்த வாரம் ரூ. 11,000 முதல் ரூ. 22,000 வரை விலைபோனது. கடந்த வாரத்தைவிட கூடுதல் விலை கிடைத்ததால் ஆடுகளை விற்பனைக்கு கொண்டுவந்த விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனா். திங்கள்கிழமை ஒரேநாளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஆடுகள் விற்பனையானதால், ஏறக்குறைய ரூ. 1 கோடிக்கு வா்த்தகம் நடைபெற்றது.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT